ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய நடிகர், யார் தெரியுமா?
சூப்பர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது, மேலும் சில மாதங்கள் இப்படத்தின் படக்குழுவினர் ஒருசிலருக்கு கொரோனா தோற்று பரவியதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இப்படத்தின் முக்கிய நட்சத்திரங்களுடன் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்து வரும் முக்கிய நடிகரான விஷ்வந்த் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மேலும் அவருடன் இயக்குனர் சிவா, நடிகர் சூரி உள்ளிட்டோர் உள்ளனர்,
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்