சினிமாவில் நுழைந்த இன்பநிதி.. முதல் படமே தனுஷுடையது தான்
முதலில் தயாரிப்பாளராக சில படங்கள் தயாரித்து, அதன் பின் ஹீரோவாக அறிமுகம் ஆகி தற்போது துணை முதமைச்சராக இருந்து வருகிறார் உதயநிதி.
பதவி ஏற்றபிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும் ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்தும் விலகிவிட்டார்.
இன்பநிதி
இந்நிலையில் தற்போது அப்பா ரூட்டில் இன்பநிதி ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் சிஇஓ ஆக பதவி ஏற்று இருக்கிறார். மேலும் அவர் நடிப்பு பயிற்சி வகுப்பில் இருக்கும் வீடியோவும் சமீபத்தில் வைரல் ஆகி இருந்தது. அதனால் விரைவில் அவர் நடிகராகவும் களமிறங்க இருப்பதாக தெரிகிறது.
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் அவரது முதல் படமே தனுஷின் இட்லி கடை படம் தான். "இன்பன் உதயநிதி வழங்கும்" என்ற டைட்டில் உடன் படம் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
