எம்புரான் பட இயக்குனரும், நடிகருமான ப்ருத்விராஜிற்கு வந்த நோட்டீஸ்.. என்ன விஷயம்?
எம்புரான் படம்
எம்புரான், மலையாள சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம். ப்ருத்விராஜ் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 240 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
சோதனை
படம் ஒருபக்கம் மாஸ் வசூல் வேட்டை நடத்திவர இன்னொரு பக்கம் எம்புரான் படத்தை கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் தயாரித்த கோபாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தினார்கள்.
சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது வருமான வரித்துறையினர் நடிகர் ப்ருத்விராஜிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வரும் 29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.