விஜய், அஜித் பட தயாரிப்பாளர்கள் வீட்டில் IT ரைடு.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்
தில் ராஜு
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இவர் படங்களை தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இவர் தான் தயாரித்து இருந்தார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த வாரிசு படத்தையும் இவர் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 8 மூலம் மக்களை ஜெயித்த சௌந்தர்யா நிகழ்ச்சிக்கு பின் போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இவர் பேசிய கூட இணையத்தில் படுவைரலானது. தயாரிப்பாளராக மட்டுமின்றி விநியோகஸ்தராகவும் தில் ராஜு இருக்கிறார்.
IT ரைடு
இந்த நிலையில், முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். தில் ராஜுவின் ஹைதராபாத் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
மேலும், அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும், மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து தயாரிப்பாளர்களின் வீட்டில் IT ரைடு நடந்து வருகிறது என வெளிவந்துள்ள செய்திகள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.