இந்தியாவிலேயே நடிகர் பிரசாந்த் தான் அந்த விஷயத்தை முதலில் செய்தாரா?- வெளிவராத தகவல்
நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெண் ரசிகைகளின் சாக்லெட் பாயாக இருந்தவர்.
அஜித், விஜய் என கலக்கிக்கொண்டிருந்த காலத்தில் தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்கி பயணித்து வந்தார்.
பெரும்பாலும் காதல் கதைகளை மையப்படுத்தி படங்கள் நடித்து வந்தவர் அதில் பெரிய வெற்றியையும் கண்டார், ரசிகைகளை அதிகம் பெற்றார்.
தொடர்ந்து நடித்து வந்தவருக்கு திருமணம் நடக்க அதனால் பிரச்சனைகள் ஏற்பட அவரது சினிமா பயணமும் பாதிப்பு அடைந்தது. இப்போது மீண்டும் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கி நடித்து வருகிறார்.
பழைய பேட்டி
இந்த நிலையில் நடிகர் பிரசாந்தின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவர், VFX பயன்படுத்தி கிராபிக்ஸ் வேலைகளை படங்களில் அதிகம் செய்து வருகிறார்கள். இந்த VFX முதல் டைரக்டர் பிரசாந்த் தானாம்.
இந்திய சினிமாவிலேயே நான்தான் முதன் முதலில் VFX டைரக்டர் என்பதை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு இவர் நடித்த ஆணழகன் படத்தில் தான் முதன்முதலில் இந்தியாவிலேயே பயன்படுத்தப்பட்டதாம்.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
