தொலைக்காட்சியில் தொடர்ந்து 8 மணி நேரம் ஒளிபரப்பான ஒரே தமிழ் திரைப்படம் இதுதான்.. மாபெரும் சாதனை

indian shankar kamal haasan raj tv prime time
By Kathick Oct 25, 2021 11:10 AM GMT
Report

என்னதான் தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து, படங்கள் பார்க்க ஓடிடி தளங்கள் பல வந்தாலும், தொலைக்காட்சிகளில் படங்கள் பார்க்கும் பழக்கம் இன்னும் மாறவில்லை.

பண்டிகை தினங்களில் மட்டுமின்றி வாராவாரம் ஞாயற்று கிழமை தோறும் ஒளிபரப்பாகும் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

சராசரியாக ஒரு படம், விளம்பரங்களுடன் சேர்ந்து மூன்றரை மணி நேரம் அல்லது அதிகபட்சம் நான்குமணி நேரம் ஒளிபரப்பாகும். இது தான் தொலைக்காட்சியின் வழக்கம்.

ஆனால், கமல் ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் சுமார் 8 மணி நேரம் ஒளிபரப்பாகி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

ஆம், கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இப்படம், 7.11.1999ஆம் தேதி அன்று ராஜ் தமிழ் தொலைக்காட்சியில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக துவங்கி, சரியாக நள்ளிரவு 12 மணிக்கு முடிந்துள்ளதாம்.

இதனால், கமலின் இந்தியன் படம் தான் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகமான நேரத்தில் ஒளிபரப்பான படம் என்று தெரிவிக்கின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US