இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி.. இவ்ளோ சீக்கிரமே வருதா?
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் இந்தியன் 2. கமல்ஹாசன் இந்தியா தாத்தா கெட்டப்பில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளம் 12 நிமிடத்தை குறைத்து தயாரிப்பு நிறுவனம்.
இருப்பினும் சமீபத்தில் ரிலீஸ் ஆன ராயன் படம் ஹிட் ஆகி இருப்பதால் இந்தியன் 2 ஓரங்கட்டப்பட்டு இருக்கிறது. சென்னையில் சிங்கிள் தியேட்டர்களில் இந்தியன் 2 காட்சிகள் எதுவும் இல்லை. மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் சில காட்சிகள் மட்டும் போடப்பட்டு வருகிறது.
ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில் இந்தியன் 2 ஓடிடியில் எப்போது வரும் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
நெட்பிலிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு இந்தியன் 2 பட உரிமையை வாங்கி இருக்கிறது. ஆனால் தியேட்டர்களில் வரவேற்பு கிடைக்காததால் ஓடிடி ரிலீஸ் முன்கூட்டியே வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வழக்கமாக நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகும். ஆனால் அதற்கு முன்பே இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது.
தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
