ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளம்! கணவரை விட அதிக சொத்து வைத்திருக்கும் நடிகை.. யார் தெரியுமா
ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் வாங்கி வரும் நடிகை, தனது கணவரை விட அதிக சொத்துக்களை வைத்துள்ளார் என தகவல் உலா வருகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆலியா பட்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். வாரிசு நடிகையான இவர் 2012ல் வெளிவந்த Student of the Year படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த இவர், நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி தம்பதிக்கு ராஹா எனும் அழகிய மகள் உள்ளார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகை ஆலியா பட் தனது கணவர் ரன்பீர் கபூரை விட அதிக சொத்துக்கு சொந்தக்காரி என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஆலியா பட்டின் சொத்து மடிப்பு ரூ. 517 கோடி இருக்குமாம். மேலும் ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு ரூ. 203 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் கணவரை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக ஆலியா பட் இருக்கிறாராம்.
இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் ஆலியா பட் - ரன்பீர் கபூர் இணைந்து, பந்த்ரா பகுதியில் உள்ள பாலி ஹீல்ஸ் என்ற இடத்தில் ரூ. 250 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.