இந்த போட்டோவில் உள்ள நடிகை யார் தெரியுமா? இந்திய சினிமாவில் முன்னணி நடிகை
திரையுலக சேர்ந்த முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று பார்த்தவுடன் சரியாக கூறிவிடுகிறார்கள். ஆனால், பலருக்கும் இவர் யார் என்பது தெரியவில்லை.
ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர்தான் இந்த நடிகை. இவர் இன்னும் தமிழில் ஒரு படம்கூட நடிக்கவில்லை என்றாலும், தமிழக இளைஞர்களின் மனதிலும் கனவு கன்னியாக இடம்பிடித்துள்ளார்.
மிருணாள் தாகூர்
அவர் வேறு யாருமில்லை நடிகை மிருணாள் தாகூர். அவர் நடித்த லவ் சோனியா எனும் படத்தில் வரும் காட்சிதான் இது. இதுவே அவருடைய முதல் இந்தி திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கிய நடிகை மிருணாள் மராத்தி மொழி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பின் பாலிவுட் பக்கம் வந்த இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பெரிதளவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவருக்கான சரியான அங்கீகாரத்தை பெற்றுதந்த படம் என்றால் அது சீதா ராமம்தான்.
இப்படத்தை தொடர்ந்து Hi நானா படமும் வெற்றியடைந்தது. மேலும் தற்போது பாலிவுட் சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் Dacoit: A Love Story. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.