பட்ஜெட் 45 கோடி, வசூல் வெறும் 60 ஆயிரம் தான்.. படுமோசமான தோல்வியடைந்த படம் எது தெரியுமா

Kathick
in திரைப்படம்Report this article
மக்களிடையே எப்போதுமே நல்ல படங்களுக்கு மாபெரும் வரவேற்பு கண்டிப்பாக இருக்கும். ஆனால், அதுவே மோசமான திரைப்படம் என்றால், கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மோசமான படுதோல்வியை சந்தித்துள்ள திரைப்படம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
The Lady Killer
பாலிவுட் திரையுலகில் வெளிவந்த திரைப்படம் The Lady Killer. இப்படத்தை இயக்குநர் அஜய் பாஹ்ல் இயக்க தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை பூமி பெட்னேகர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
படுமோசமான தோல்வி
இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கதை நன்றாக இல்லாத காரணத்தினால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தை ரூ. 45 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். ஆனால், இப்படம் மொத்தமாக ரூ. 60 ஆயிரம் தான் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளர் துளி அளவு கூட லாபம் கிடைக்கவில்லை.
இந்திய சினிமாவின் வரலாற்றில் படுமோசமான தோல்வியடைந்த திரைப்படம் இதுவே ஆகும் என கூறப்படுகிறது. மேலும் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் OTT உரிமைக்கு நெட்பிளிக்ஸ் டீல் பேசியுள்ளனர்.
ஆனால், வெளிவந்தபின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு, இந்த டீலை நெட்பிளிக்ஸ் கேன்சல் செய்துவிட்டார்களாம். இப்படம் தற்போது Youtube காண கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
