அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. ரஜினி முதல் ஆலியா பட் வரை படையெடுத்து செல்லும் சினிமா நட்சத்திரங்கள்
அயோத்தி ராமர் கோவில்
இன்று மிகவும் பிரம்மாண்டமாக அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இந்த ஆன்மீக விழாவில் பங்கேற்க லட்ச கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது.
படையெடுத்து செல்லும் சினிமா நட்சத்திரங்கள்
மேலும் சினிமாவை சேர்ந்த பல நட்சத்திரங்களும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சென்றுள்ளனர். ஆம், நேற்று தமிழ் சினிமாவை சேர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் அண்ணன் உடன் புறப்பட்டு சென்றார். அதே போல் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்றுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் இருந்து அமிதாப் பச்சன், ஆலியா பட், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா, கங்கனா ரணாவத், விக்கி கவுஷல், கத்ரினா கைஃப், இயக்குனர் ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சென்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் கூட வெளிவந்து இணையத்தில் வைரலானது.
தெலுங்கு திரையுலகில் இருந்து நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம் சரண் மற்றும் மனைவியுடன் தனி விமானத்தில் புரட்டு சென்றுள்ளார். மேலும் நடிகர் பவன் கல்யாணும் சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ayodhya Airport visuals of megastar #Chiranjeevi garu and Megapowerstar #Ramcharan garu pic.twitter.com/XlUtHX73HC
— Rajesh Manne (@rajeshmanne1) January 22, 2024
கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சென்றுள்ளார்களாம். அங்கிருந்து எடுக்கப்படும் வீடியோ, மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
