விமானத்தில் விஜய்யின் திரைப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் வீரர்.. வீடியோ பாருங்க
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் தளபதி 69ல் நடிக்க முடிவு செய்துள்ள விஜய், அதுவே அவருடைய கடைசி படம் என்றும் அதன்பின் முழுமையாக அரசியலில் களமிறங்கப்போவதாக கூறியுள்ளார்.
விஜய் அரசியலுக்கு செல்வது அவருடைய ரசிகர்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபக்கம் சினிமாவில் இருந்து அவர் முழுமையாக விலகுவது வருத்தத்தை தந்துள்ளது. தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர், பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆட்டம்போட்ட சூர்யகுமார் யாதவ்
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக மாறியுள்ளார் சூர்யகுமார் யாதவ். இவர் IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள சூர்யகுமார் யாதவ்வின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதில் விஜய் நடித்த வாரிசு படத்தில் வரும் ஒரு காட்சியை பார்த்துவிட்டு சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சியாக அமர்ந்தபடியே ஆட்டம்போடுகிறார். வாரிசு திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்கும் காட்சியை பார்த்துவிட்டுதான் குஷியில் இப்படி ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
?❤️ pic.twitter.com/kuh5fee4Qe
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) May 26, 2024