ஜீ தமிழின் இந்திரா சீரியல் புகழ் டாப் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... கியூட்டான ஜோடி
இந்திரா
ஜீ தமிழில் வெற்றிகரமாக நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய் என பல தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
ஆனால் சமீபத்தில் மீனாட்சி பொண்ணுங்க, சண்டக்கோழி, இந்திரா போன்ற தொடர்களும் முடிவுக்கு வந்தது. சீரியல்கள் முடியும் வேகம் புதிய தொடர்களையும் ஜீ தமிழ் உடனே களமிறக்கிவிடுகிறார்கள்.
அப்படி விரைவில் வள்ளியின் வேலன் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
நிச்சயதார்த்தம்
ஜீ தமிழில் சமீபத்தில் முடிந்த தொடர்களில் ஒன்று இந்திரா. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 536 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
முக்கிய ஜோடியாக நடித்த ஃபௌசில் ஹிதாயா மற்றும் அக்ஷய் கமல் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்கள்.
இந்த நிலையில் இந்திரா தொடரில் நடித்த மேனகா ப்ரியாவிற்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அழகிய ஜோடியின் போட்டோ வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.