இந்திரா திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமணி என்ற தரமான படம் மூலம் அறிமுகமான வசந்த் ரவி நடிப்பில் சபரிஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த இந்திரா படம் வசந்த் ரவிக்கு வெற்றிப்படமாக அமைந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
வசந்த் ரவி இன்ஸ்பெக்டர் ஆக இருந்துக்கொண்டு போலிஸ் வண்டியிலேயே குடித்து விட்டு விபத்து ஏற்படுத்துகிறார், இதனால் இவர் சஸ்பெண்டில் இருக்க, இன்னும் குடிக்க ஆரம்பிக்கின்றார். இதனால் அவரின் கண் பார்வை இழக்கிறார். இவரின் காதல் மனைவி மெக்ரீன் தான் வசந்தை பார்த்துக்கொள்கிறார்.
இதே நேரத்தில் சுனில் தன்னை வெறுப்பேத்துபவர்கள் அனைவரையும் கொன்று அவர்கள் கையை மட்டும் வெட்டி வேறு ஒரு இடத்தில் போடுகிறார். அப்படி ஒரு நாள் வசந்த் ரவி மனைவி மெக்ரீனையும் கொன்று கையை அறுத்து செல்கிறார்.
இதனால் மிக மனவேதனையில் தன் மனைவியை கொன்றவனை பிடிக்க வேண்டும் என வசந்த் ரவி கண் பார்வை இல்லாத போது கூட நண்பன் உதவியிடன் சுனிலை தேடி சென்று எப்படியோ பிடிக்கிறார். அவரை பிடித்து விசாரிக்கும் போது தான் தெரிகிறது,
எல்லா கொலைகளை அவர் தான் செய்துள்ளார், ஆனால், வசந்த் ரவி மனைவியை அவர் கொல்லவில்லை என்று, இதனால் வசந்த் ரவி மிகவும் மன உளைச்சல் மற்றும் கோபத்தில் அப்போது மனைவியை கொன்றது யார் என தேடுவது மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
வசந்த் ரவி அவருக்கு என்றே எழுதி வைத்த ரோல் போல், சோகங்கள் நிறைந்த முகத்தில், மனைவி கொலையாளியை தேட வேண்டும், பார்வை இல்லாத நேரத்தில் கூட என்ற பரிதவிப்பு அவர் சிறப்பாக செய்துள்ளார், என்றாலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடிக்க வேண்டிய இடத்தில் குறிப்பாக, அழுவது, எமோஷ்னலை வெளிபடுத்தும் இடத்தில் கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது.
சுனில் தன் பங்கிற்கு எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ செய்துள்ளார், தன்னை வெறுப்பேற்றுபவர்களை அவர் கை நடுங்கி கொலை செய்யும் இடமெல்லாம் மிரட்டுகிறார், அதே நேரத்தில் சைக்கோ என்றாலே இப்படி தான் இருப்பான் என்ற டிபிக்கிள் சினிமாதனமும் அவர் நடிப்பில் தவிர்க்க முடியவில்லை.
படத்தின் முதல் பாதி யார் எதற்கு சுனில் இந்த கொலையை செய்கிறார், சைக்கோ கொலைக்காரன் சுனிலை, வசந்த் ரவி பிடித்தாரா என்ற தேடல் நம்மையும் கதையுடன் நகர்த்துகிறது.
ஆனால், இடைவேளையில் வரும் டுவிஸ்ட், அதன் பின் வரும் ப்ளாஷ்பேக், பழிவாங்குதல் ஸ்டோரி இப்போது படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன், தற்போது யாரை நாம் வில்லனாக பார்ப்பது என்ற குழப்பம் வருகிறது.
அதுவரை மனைவியை இழந்த வசந்த் ரவி மீது இருந்த பரிதவிப்பு, இரண்டாம் பாதி வேறு களத்திற்கு கதை சென்றவுடன், இவருக்கா நாம் பரிதாப பட்டோம் என்று நினைக்க வைக்கிறது, இதுவே படத்தின் பலவீனமாகிறது.
அதை தொடர்ந்து வசந்த் ரவி சுற்றி என்ன எமோஷ்னல் சுற்றினாலும் நமக்கு பாவம் வரமறுக்கிறது, படம் முழுவதுமே ஒரு சைக்கோ கொலையாளி அவனை தேடும் படலம் என்று சென்றிருந்தால் கண்டிப்பாக சுவாரஸ்யம் நிறைந்திருக்குமோ என்னமோ, ஆனால், குடி, கோபம் ஒரு மனிதனை எவ்வளவு பெரிய ஆபத்திற்கு தள்ளுகிறது என்பதை காட்டிய விதத்திற்கு பாராட்டுக்கள்.
டெக்னிக்கலாக படம் நன்றாகவே உள்ளது, ஒளிப்பதிவு இசை என அனைத்தும் நன்றாக இருந்தாலும் இசையில் அனிருத் வாடை ஹெவி, விக்ரம் BGM லாம் வந்து செல்கிறது.
க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி
பின்னணி இசை
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் ஏற்பட்ட கதை மாற்றம் ஆடியன்ஸுக்கு ஒரு குழப்பதை உண்டு செய்கிறது.