தந்தை இல்லாத போது தான் அது தெரியும்... ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா எமோஷ்னல் பேச்சு
ரோபோ ஷங்கர்
ரோபோ ஷங்கர், விஜய் டிவி மூலம் தமிழ் சின்னத்திரையில் தனது திறமையை காட்டியவர்.
கலக்கப்போவது யாரு, அது இது எது என ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று கலக்கிய ரோபோ ஷங்கர் அப்படியே வெள்ளித்திரை பக்கம் கலக்க துவங்கினார்.
அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடிக்க தொடங்கியவரின் திரைப்பயணத்திற்கு கொஞ்சம் இடைவேளை விடும் அளவிற்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க துவங்கினார், ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கடந்த செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
மகள் பேச்சு
ரோபோ ஷங்கர் அவர்களின் உயிரிழப்பு அனைவருக்குமே சோகத்தை கொடுத்துள்ளது. விஜய் டிவியின் மூலம் தனது பயணத்தை துவங்கியவருக்கு இந்த தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
ரோபோ ஷங்கரின் நினைவுகளை அந்த நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் பகிர்ந்தனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இந்திரஜா ஷங்கர், தந்தை இல்லாத போது தான் தெரியும், உலகிலேயே எல்லா சொந்தமும் அவர் இருந்தால் தான் நிலைக்கும், இல்லா விட்டால் நடிக்கும் என பேசியுள்ளார்.