தனது அப்பா இறந்தது அதனால் தானா, அம்மா நடனம் ஆடியது ஏன்?... இந்திரஜா ஷங்கர் பதில்
ரோபோ ஷங்கர்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் சின்னத்திரை பக்கம் வந்து மக்களை கவர்ந்தவர் தான் ரோபோ ஷங்கர்.
சிரிக்கவே மறந்த பலரை சிரிக்க வைத்த ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சி பக்க வந்து ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
கலக்கப்போவது யாரு, அது இது எது என எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் ரோபோ ஷங்கர் இருப்பார், அந்த அளவிற்கு ஓய்வே இல்லாமல் எல்லா ஷோவில் கலந்துகொண்டு வந்தார்.
அவரின் திறமை கண்டு வெள்ளித்திரை அழைக்க அதிலும் ஒரு வலம் வந்தார். அஜித், விஜய், தனுஷ் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் படங்கள் நடித்து அசத்தினார்.
இந்திரஜா
கடந்த செப்டம்பர் 18ம் தேதி ரோபோ ஷங்கர் அவர்கள் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பை இப்போதும் பலரும் ஏற்கவில்லை.
‘
சமீபத்தில் ரோபோ ஷங்கர் படம் திறந்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் இந்திரஜா பேசும்போது, எனது அப்பா அதனால் தான் உயிரிழந்தார், இதனால் உயிரிழந்தார் என்பதை பற்றியெல்லாம் நான் வேறொரு நாள் கூறுகிறேன்.
அம்மா நடனம் ஆடினார்கள் என்றால், எனது அம்மா-அப்பா காதலே நடனம் தான். அந்த வழியில் எனது அப்பாவிற்கு இறுதி அஞ்சலி நடனம் ஆடி செய்தார் அம்மா. அது என்ன உணர்வு என்பது எங்களுக்கு தெரியும் என பேசியுள்ளார்.

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
