வாடகைத் தாய், டெஸ்ட் ட்யூப் பேபி என்று பேசுகிறார்கள்... வேதனையில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா
இந்திரஜா ஷங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

ரோபோ ஷங்கரின் மகளை நாம் அனைவரும் அறிவோம். இவர், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். இவருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்திரஜா - கார்த்திக் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது.
வேதனையில் இந்திரஜா
இந்த நிலையில், தன்னை பற்றியும் தனது குழந்தை பற்றியும் மோசமான வகையில் பலரும் விமர்சிக்கிறார்கள் என வேதனையுடன் இந்திரஜா பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, "வாடகைத் தாய், டெஸ்ட் ட்யூப் பேபி என்று பலரும் விமர்சிக்கிறார்கள். திருமணத்திலிருந்து இதுவரை இப்படியான கருத்துக்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறேன். அவை மனதை மிகவும் காயப்படுத்துகின்றன. உண்மை அறியாமல் எதையும் பேசாதீர்கள். ஒரு தாயாகும் போது அவள் எதிர்கொள்ளும் சூழலை புரிந்துகொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu