கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவரிடன் ஒரு ஆசையை கூறிய இந்திரஜா.. அவர் நிறைவேற்றுவாரா?
இந்திரஜா
சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை.
நடிகர் ரோபோ ஷங்கர், சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் சாதித்து வருபவர். முதலில் தனுஷுடன் மாரி படத்தில் நடித்தார், அதன்பிறகு நிறைய படங்கள் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.
இடையில் உடல்நிலை காரணமாக அவரை நிறைய படங்களில் காண முடியவில்லை. இப்போது மீண்டும் ஆக்டீவாக நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்திரஜா
ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இவருக்கு கடந்த ஆண்டு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது, தற்போது அவர்கள் கர்ப்பமாகவும் உள்ளனர்.
அண்மையில் ஒரு பேட்டியில் இந்திரஜா பேசும்போது, எனக்கு பிரசவம் நடக்கும்போது பிரசவ அறையில் இவரும் இருக்க வேண்டும் என மருத்துவரிடம் அனுமதி வாங்கிவிட்டேன், அதுதான் என் ஆசை என கூறியுள்ளார்.
அதற்கு அவரது கணவர் கார்த்திக், எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லை. டெஸ்ட் கிட்டை இந்திரஜா என்னிடம் கொடுத்தபோதே அழுதுவிட்டேன்.
இதில் பிரசவ அறைக்குள் நான் சென்று எப்படி சமாளிக்கப்போகிறேனோ என கூறியுள்ளார்.