இங்க நான் தான் கிங்கு திரை விமர்சனம்
சந்தானம் காமெடி படங்களாக நடித்து தற்போது இருக்கும் வெட்டு, குத்து கமர்ஷியல் சினிமாவிலிருந்து அவ்வபோது காப்பாற்றுவார். ஆனால், இந்த காமெடி படங்கள் அனைத்தும் அவருக்கு கைக்கொடுப்பது இல்லை, தில்லுக்கு துட்டு சீரிஸ், ஏ1, பாரீஸ் ஜெயராஜ், வடக்கப்பட்டி ராமசாமி போன்ற படங்கள் க்ளிக் ஆக, இங்கு நான் தான் கிங்கு க்ளிக் ஆகியதா? பார்ப்போம்.
கதைக்களம்
சந்தானம் அப்பா-அம்மா இல்லாமல் தனியாக தனக்கு பெண் தேடி வருகிறார். வீடு இருந்தால் பெண் கிடைக்கும் என நம்பி 25 லட்சம் கடன் வாங்கி சென்னையில் ஒரு ப்ளாட் வாங்குகிறார்.
அந்த 25 லட்சம் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் என இருக்க, தம்பிராமையா தன்னை பெரிய பணக்காரன் என்பது போல் காட்டிக்கொண்டு தன் பெண்ணை சந்தானத்துக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
இது தெரிந்து சந்தானம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக, ஒரு நாள் தான் வேலை செய்யும் இடத்திற்கு தன் மனைவி, தம்பி ராமையா, பாலசரவணன் என தன் குடும்பத்தையே அழைத்து செல்கிறார்.
அங்கு ஒரு பிரச்சனையில் தன் MD(விவேக் பிரசன்னா)-யை அடிக்க போக, அடுத்த நாள் வீட்டிலும் பிரச்சனை, அப்போது அந்த ப்ளாட் கீழே MD வர அவரை சமாதானம் செய்து தம்பி ராமையா, வீட்டிற்கு அழைத்து வர, ச வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து அங்கையே இறக்கிறார்.
பிறகு எல்லோரும் அவரை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்தால், அதே MD வீட்டில் உயிரோடு உட்காந்திருக்க, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
காமெடி படங்கள் என்றாலே ஒரு மிக்கபெரிய குழப்பம் ஏறப்பட வேண்டும். அந்த குழப்பத்தில் ஹீரோ மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதே சுவாரஸ்யமாக இருக்கும்.
அப்படி ஒரு குழப்பம் இதிலிம் இருக்கிறது, ஆனால், அது இருந்தும் திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம், விழுந்து சிரிக்கக்கூடிய பெரிய காமெடி காட்சிகள் இல்லாதது கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.
சந்தானம் தன்னால் முடிந்த அளவிற்கு ஒன் லைனில் ஸ்கோர் செய்கிறார், அவரிடம் கலாய் வாங்க இந்த முறை தம்பி ராமையா, பாலசரவணன் என இருவர் மாட்டியுள்ளனர். தம்பி ராமையா வழக்கம் போல் தன் எக்ஸ்ட்ரா ஆக்டிங்கில் ஸ்கோர் செய்தாலும் பல படங்களில் இதை பார்த்தாச்சே என்று தான் தோன்றுகிறது.
ரீல்ஸில் பேமஸ் ஆகிய ப்ரியாலாயா முதல் படத்திலேயே நன்றாக நடித்துள்ளார், அதிலும் விவேக் பிரசன்னா இறந்ததும், அதை அவர் எப்படி இறந்தால் என்று சொல்லும் இடம் சந்தானம் மட்டுமின்றி ஆடியன்ஸும் ஷாக் தான்.
படத்தில் செகண்ட் ஆப்-ல் மருத்துவமனையில் ஒரு காமெடி சீக்குவன்ஸ் வருகிறது. அது மட்டுமே கொஞ்சம் ரசிக்க வைக்கிறது, மற்றப்படி மற்ற அனைத்தும் நாம் பார்த்து பல முறை சிரித்த காமெடி சீக்குவன்ஸாகவே இருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்களும் எங்கேயோ கேட்ட ரகம் தன்.
க்ளாப்ஸ்
செகண்ட் ஆப்-ல் வரும் மருத்துவமனை காமெடி காட்சிகள்.
பல்ப்ஸ்
காமெடிக்கான களம் அமைந்தும் அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் செல்லும் காட்சியமைப்பு.