மேடையில் அசிங்கப்படுத்திய இனியா.. ராதிகாவிடம் மீண்டும் சிக்கிக்கொண்ட கோபி! லேட்டஸ்ட் ப்ரோமோ
பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்யா இருக்கும் வீட்டிலேயே கோபி மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக இருந்து வருவதால் பல்வேறு பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ராதிகாவை பாட்டி தொடர்ந்து திட்டி வருகிறார்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இனியா அவரது பள்ளி விழாவில் பேசும்போது அம்மா பாக்யாவை தான் பெருமையாக பேசுகிறார். அங்கேயே இருக்கும் அப்பா கோபியை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்வதில்லை.
திட்டும் ராதிகா
கோபி எதையும் யோசிக்காமல் இனியா பேசுவதை போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் பின் அதை பார்த்து பூரிப்பும் வரும்போது ராதிகா அங்கு வருகிறார்.
உங்களை மதிக்காத இனியாவுக்காக இவ்வளவு செய்யும் நீங்கள், மயூவை ஏன் பள்ளிக்கு அழைத்து வந்து விடவில்லை என கேட்டு கோபியை திட்டுகிறார்.