சரிகமப சீனியரில் இனியா பாடிய அந்த பாடல்.. நடுவர்கள் சொன்ன வார்த்தை! தேவயானி நெகிழ்ச்சி
சரிகமப
தொலைக்காட்சிகளில் தற்போது நிறைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி எடுத்துக் கொண்டால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது, இப்போது புதிய சீசன் வித்தியாசமான கான்செப்டுடன் தொடங்கப்பட்டு உள்ளது.
இன்னொரு நிகழ்ச்சி என்றால் ஜீ தமிழின் சரிகமப தான், இப்போது பெரியவர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சரிகமப நிகழ்ச்சியில், தேவயானியின் மகள் இனியா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
தேவயானி நெகிழ்ச்சி
கடந்த வாரம் நடைபெற்ற தெய்வீக பாடல்கள் ரவுண்டில் இனியா, 'அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே' என்ற பாடலைப் பாடி நடுவர்களின் பாராட்டைப் பெற்றார்.
இதனால் இந்த வாரம் அவருக்கு, 'கோல்டன் பெர்ஃபாமன்ஸ்' விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியான தேவயானி "என்னுடைய மகள், இந்த மேடையில் பாடுவது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.