பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ! இனியா எடுத்த அதிரடி முடிவு.. கதையில் பெரிய ட்விஸ்ட்
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் கணவர் மற்றும் குடும்பம் மிகவும் மோசமானவர்கள் என்பது தற்போது தான் கோபி மற்றும் குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது.
திருமணத்தின்போது வேண்டாம் வேண்டாம் என பாக்கியலட்சுமி பலமுறை சொல்லியும் கேட்காமல் திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது பையன் போதை பொருளுக்கு அடிமையானவன் என்பது தெரிந்து கோபி, பாட்டி என எல்லோரும் அழுது புலம்புகிறார்கள்.
பாக்யாவும் 'நான் சொன்னதை நீங்கள் அப்போது கேட்கவே இல்லையே' என புலம்புகிறார்.
விவாகரத்து
இந்நிலையில் மாமியார் வீட்டுக்கு செல்லாமல் அம்மா வீட்டிலேயே இருக்கும் இனியா தான் ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக எல்லோருக்கும் கூறுகிறார்.
நான் விவாகரத்து செய்யப் போகிறேன் என அவர் கூறுவதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகிறார்கள்.
மறுபுறம் இனியாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என வில்லன் மாமனார் சுதாகர் திட்டம் போடுகிறார்.
இனியா விவாகரத்துக்கு பிறகு மீண்டும் வேலைக்காரி மகன் உடன் லவ் ட்ராக் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து கதையில் வரும் ட்விஸ்ட் இதுவாகத்தான் இருக்கும் என தெரிகிறது.