ஷூட்டிங்கில் காயம் அடைந்த சூர்யாவின் தற்போதைய நிலை! வைரலாகும் வீடியோ
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் சில தினங்களுக்கு முன்பு சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது.
ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவின் தோளில் காயம் ஏற்ப்பட்டது. அதனால் சூர்யா சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார்.
இதற்கு முன்பு ஆதவன் படத்தில் நடிக்கும் போது சூர்யாவுக்கு தோளில் காயம் ஏற்பட்டு இருந்தது. ஹெலிகாப்டர் காட்சியில் நடித்தபோது அவர் காயம் அடைந்த நிலையில் தற்போது 14 வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

ஏர்போர்ட் வீடியோ
இந்நிலையில் சூர்யா ஓய்வெடுப்பதற்காக மும்பைக்கு கிளம்பி இருக்கிறார். அவர் ஏர்போர்ட் வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
ஏர்போர்ட் உள்ளே சூர்யா நடந்து செல்லும் வீடியோ இதோ..