குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்திய விவகாரம்... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
குட் பேட் அக்லி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி.
இந்த வருட ஆரம்பத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாக ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியானது. ஆக்ஷன் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவான இப்படம் அஜித் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
ரூ. 250 கோடி பட்ஜெட்டில் படம் தயாரானதாக கூறப்படும் நிலையில் இப்படம் ரூ. 300 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது.

பரபரப்பின் உச்சமாக தர்ஷன் திருமண கதைக்களம்- இன்னொருபக்கம் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்
வழக்கு
இந்த படத்தில் இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்கள் இடம்பெற்றன.
இந்த நிலையில் தனது பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது சட்டத்துக்கு விரோதமானது என்பதால் படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர, குட் பேட் அக்லி படத்தில் 3 பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் மனு குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
