சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை தட்டிதூக்கிய அமரன், மகாராஜா படங்கள்.. முழு விவரம்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் ரசிகர்கள் கொண்டாடும் நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகின.
மகாராஜா, அமரன், லப்பர் பந்து என ரசிகர்களால் நிறைய படங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. வெற்றிப் படங்களை கொடுக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நிறைய விருது விழாக்கும் நடைபெறுகின்றன.
அப்படி கடந்த டிசம்பர் 12 முதல் 19 வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.
தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்தும் இந்த விழாவில் 180 படங்கள் திரையிடப்பட்டனவாம்.
இதில் விருது பெற்றவர்களின் விவரத்தை காண்போம்.
சிறந்த படம்- இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை.
சிறந்த படம் (2ம் இடம்)- லப்பர் பந்து, இயக்குனர் தமிழரசன், தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரம்.
சிறந்த நடிகர்- மகாராஜா திரைப்படத்துக்காக விஜய் சேதுபதிக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை- அமரன் படத்திற்காக சாய் பல்லவிக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
