பிரம்மாண்டமான IPL 2025 ஓபனிங் விழா... இத்தனை பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களா?
இந்தியாவில் எந்த விளையாட்டு பிரபலமாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் கிரிக்கெட்டிற்கு அதிக ஆதரவு உள்ளது.
இது ஒருவர் சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை, எல்லோரும் அறிந்தது தான்.
உலகின் மிகவும் பணக்கார கிரிக்கெட் பிரீமியர் லீக்கான ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை மார்ச் 22ம் தேதி ஆரம்பமாகவுள்ளது.
இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 18வது சீசன் அதிக எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இந்த 18வது சீசனின் தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டியிலேயே ஷாருக்கானின் கொல்கத்தா அணி விளையாட இருப்பதால் அவர் தரப்பில் இருந்து நிறைய பாலிவுட் சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளவார்கள் என கூறப்படுகிறது.
சல்மான் கான், விக்கி கவுசல், சஞ்சய் தத், கேத்ரினா கைஃப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் உள்ளன. அதேபோல் சல்மான் கான் தனது சிக்கந்தர் படத்தை விளம்பரப்படுத்த ஐபிஎல் தொடக்க விழாவை பயன்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.