ஐபிஎல்-லில் நடக்கும் டிக்கெட் மோசடி..? அன்றே கணித்த ஹெச்.வினோத்
டிக்கெட் மோசடி?
ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் உள்ள சேப்பாக் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை காணவேண்டும் என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதிலும் தங்களுக்கு பிடித்த அணியின் விளையாட்டை காண வேண்டும் என இரவில் இருந்து காலை வரை மைதானத்தின் வெளியே டிக்கெட் வாங்க காத்திருந்தனர்.
ஆனால், காத்திருந்த பல ரசிகர்களுக்கு டிக்கெட் காலியாகிவிட்டது என தெரிந்ததும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. வரிசையில் 1000 பேர் காத்திருந்த நிலையிலும், அதில் சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது என்றும், பெரும்பாலான ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
பல்லாயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்தமைதானத்தில் எங்களுக்கு மட்டும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதை நாங்கள் காத்திருக்கும் முன்பே கூறியிருக்கலாமே என்று ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியுள்ளனர்.
தங்களுக்கு கிடைக்கவேண்டிய டிக்கெட்களை VIP களுக்கு விற்றுவிடுவதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
அன்றே கணித்த ஹெச்.வினோத்
இந்நிலையில், இயக்குனர் ஹெச்.வினோத் தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த துணிவு படத்தில் இதுகுறித்து அன்றே கூறியுள்ளார்.
துணிவு படத்தில் வில்லன் பேசும் காட்சி ஒன்றில், 'குறிப்பிட்ட அணிகள் இரண்டு வருடம் தடை செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் அந்த அணிகளை புறக்கணித்தார்கள். ஆனால், அதன்பின் மக்கள் என்ன செய்தார்கள்.
பல மணி நேரம் வரிசையில் நின்று கிரிக்கெட் பார்க்க டிக்கெட் வாங்கினார்கள். அதிலும் சிலர் பிளாக்கில் கூட வாங்கினார்கள். தடை செய்யபட்ட அணிக்காக போராடினார்கள், இந்த அணிக்காக எங்களுடைய உயிரை கூட கொடுப்போம் என்று ரசிகர்கள் கூறினார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது, பொது மக்களுக்கு நல்லது கெட்டது, நல்லவன் கெட்டவன் இது எதை பற்றியும் கவலை கிடையாது.
அவர்கள் கிரிக்கெட்டில் தடைசெய்யப்பட்ட அணிகள் செய்த தவறுகளை மறந்துவிடுவார்கள். மீண்டும் நாங்கள் ஏமாற்ற தயாராகி விடுவோம், மக்கள் ஏமாற தயாராகி விடுவார்கள் ' என வில்லன் பேசும் வசனம் இடம்பெறும்.
தற்போது ஐபிஎல் மூலம் ஏற்படும் சூழ்நிலைகள் துணிவு படத்தில் ஹெச்.வினோத் இயற்றிய காட்சியை போலவே உள்ளது என கூறி இந்த விஷயத்தை வைரலாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.
நானியின் தசரா படத்தின் வசூல் இத்தனை கோடியா!.. எவ்ளோ தெரியுமா?