சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ப்ரோமோ, 3 வருடம் சிறை தண்டனை என ஐ.பி.எஸ் கமெண்ட்!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்கும் ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியல் தான் தென்றல் வந்து என்னை தொடும். இதில் பவித்ரா மற்றும் வினோத் பாபு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் புதிய ப்ரோமோ தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஆம், அந்த ப்ரோமோவில் கதாநாயகன் கதாநாயகியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கோவிலில் தாலி கட்டுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவி வந்த இந்த சீரியலின் ப்ரோமோவை கண்ட டாக்டர் வருண் குமார் ஐ.பி.எஸ் இது குறித்து கமெண்ட் செய்துள்ளார்.
அதில் இதுபோன்ற செயல்களுக்கு எதிரான சட்டங்களின் நீண்ட பட்டியலை சுட்டிக்காட்டி கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த கூடும் எனவும் பதிவிட்டுள்ளார்.
— Dr.Varun Kumar IPS (@VarunKumarIPSTN) July 26, 2021