இறுதிப்போட்டிக்கு செல்ல போவது ஸ்ரீதர் சேனாவா, மானசி-ஆ விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சீசன் 8 நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர்கள் ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி, இவர்கள் இருவரும் சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வைல்ட் கார்டு சுற்று நடந்துள்ளது.
இதில் மானசி மற்றும் ஸ்ரீதர் சேனா இருவரும் போட்டிபோட்டு பாடியுள்ளனர், இவர்களில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.