முதல் நாள் இறைவன் படம் செய்துள்ள மோசமான வசூல்.. எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கு எப்படி விமர்சனம் கிடைக்கும் என்று யாராலும் சரியாக சொல்லிவிடவே முடியாது. பல எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்களுக்கு சில நேரம் ஏமாற்றம் கிடைக்கும்.
ஆனால், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று முழு திருப்தியுடன் ரசிகர்கள் வெளியே வருவார்கள். அப்படி பல கதைகள் சினிமா வாழ்க்கையில் உள்ளன. அது போல் தான் நேற்றும் நடந்தது.
இறைவன்
A சான்றிதழ் கிடைத்திருந்தாலும், மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் இறைவன். ராவ்வான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள தமிழ் படத்தை திரையரங்கில் பார்க்கவிருக்கிறோம் என ரசிகர்கள் திரையரங்கிற்குள் சென்றனர்.

முதல் நாள் வசூல்
ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆம், இறைவன் திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை தான் மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் முதல் நாள் வசூல் மோசமான நிலைமையை சந்தித்துள்ளது.

ஆம், இறைவன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. ஐ. அஹமத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நயன்தாரா, நரேன், விஜயலக்ஷ்மி, சார்லி, ராகுல் போஸ், வினோத் கிஷன் என பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu