அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. வெளிவந்த தகவல்

By Karthick Raja Nov 07, 2026 05:54 AM GMT
Report

Irandu Vaanam movie release update: விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரண்டு வானம். இப்படத்தை இயக்குநர் ராம்குமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: சீன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

விஷ்ணு விஷால் - ராம் குமார்

இயக்குநர் ராம் குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் முதல் முறையாக முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்காக கூட்டணி அமைத்தனர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின், இதே கூட்டணி இரண்டாவது முறையாக ராட்சசன் திரைப்படத்திற்காக இணைந்தது. இப்படம் தமிழ் சினிமாவிற்கு உலகளவில் மாபெரும் பெருமையை தேடி தந்தது. இதனால் ராட்சசன் 2 திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால், இவர்கள் 3-வது முறையாக இணைந்தது 'இரண்டு வானம்' திரைப்படத்திற்காக.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. வெளிவந்த தகவல் | Irandu Vaanam Movie Release Date Update

இரண்டு வானம்

சத்யஜோதி தயாரிப்பில் விஷ்ணு விஷால் - ராம்குமாரின் 3-வது கூட்டணியில் உருவாகி வரும் இரண்டு வானம் திரைப்படத்தில் முன்னணி நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து வெளியான வெள்ளிச்சுடரே பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. வெளிவந்த தகவல் | Irandu Vaanam Movie Release Date Update

ரிலீஸ் தேதி

இரண்டு வானம் திரைப்படம் அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்படி படம் அந்த தேதியில் வெளியாகவில்லை. இதனால் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. வெளிவந்த தகவல் | Irandu Vaanam Movie Release Date Update

இந்த நிலையில், இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US