Blue Sattai மாறனுக்கு பதிலடி ! இரவின் நிழல் பட சர்ச்சைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி
இரவின் நிழல்
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்து சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்து வருபவர். அப்படி அவரின் புதிய முயற்சியில் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல்.
இப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே பிரபல திரைப்பட விமர்சகரான Blue Sattai மாறன் அவரின் டிவிட்டர் பக்கத்தில், பார்த்திபன் சொல்வது போல் இரவின் நிழல் திரைப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் எடுக்கப்பட்ட Nonlinear திரைப்படம் இல்லை.
வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி
அப்படி உலகத்திலே முதன்முறையாக எடுக்கப்பட்டது Fish & Cat 2013 என்ற இரானியன் திரைப்படம் தான், இதனை உலகின் மிகவும் பிரபலமான பத்திரிக்கையான Variety ஒப்புக்கொண்டுள்ளது என இரவின் நிழல் திரைப்படம் குறித்த தனது குற்றச்சாட்டை வைத்திருந்தார் Blue Sattai மாறன் .
இந்நிலையில் தற்போது அந்த Variety Magazine அவர்களின் பத்திரிக்கையில் இரவின் நிழல் திரைப்படத்தை உலகத்திலே முதன்முதலாக Non-linear Single Shot-ல் எடுக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிட்டுள்ளது.
சென்னைக்கு வந்தவுடன் அஜித் செய்ய தொடங்கிய விஷயம்