ப்ளூ சட்டை மாறனுக்கு நடிகர் பார்த்திபன் பதிலடி! என்ன கூறி இருக்கிறார் பாருங்க

Iravin Nizhal
By Parthiban.A 2 மாதங்கள் முன்

இரவின் நிழல் படம் தற்போது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என விளம்பரப்படுத்தப்பட்டதால் அதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஆனால் இதில் 'இரவின் நிழல்' படம் உலகத்தில் முதல் படமல்ல என கூறிய ப்ளூ சட்டை மாறன், Fish & Cat என்ற வெளிநாட்டு படம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என குறிப்பிட்டு இருந்தார்.

ப்ளூ சட்டை மாறனுக்கு நடிகர் பார்த்திபன் பதிலடி! என்ன கூறி இருக்கிறார் பாருங்க | Iravin Nizhal Parthiban Reply To Blue Sattai Maran

இந்த விமர்சனத்திற்கு நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.

விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ, சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக, நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுசரி! எதுசரி என விளங்க!

Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear’என்ற வரிசையில் இல்லை.இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம்.

15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன்.அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே!

இவ்வாறு பார்த்திபன் கூறி இருக்கிறார். 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US