பிக்பாஸ் சீசன் 5-ல் காண காணும் காலங்கள் இர்பான் ! அவரே வெளியிட்ட பதிவு

cwc bb irfan
By Jeeva Aug 03, 2021 12:20 PM GMT
Report

காண காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரம் தான் இர்பான், இந்த சீரியலின் மூலம் இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டமே உருவானது.

மேலும் இவர் அந்த சீரியலை தொடர்ந்து சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார், அதன்பின் இவரை எந்தஒரு சீரியல் மற்றும் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இர்பான் அவ்வப்போது அவரின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் இணைந்தே உள்ளார்.

மேலும் தற்போது அவரின் இன்ஸ்டா ஸ்டோரியில் BB அல்லது CWC என்ற கேள்விக்குபதிலளித்துள்ளார். அதில் "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன். அதற்கான ஆள் நான் கிடையாது. மேலும் எனக்கு சண்டை மற்றும் நாடகம் பிடிக்காது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த வருடம் நிராகரித்தேன், ஆனால் மீண்டும் அந்த வாய்ப்பு வந்தால் நிச்சயம் நான் கலந்து கொள்வேன்" என கூறியுள்ளார். 



Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US