நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்திற்கு குக் வித் கோமாளி இர்பான் கொடுத்த பரிசு... என்ன தெரியுமா?
நெப்போலியன் மகன்
நடிகர் நெப்போலியன், இப்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக் நாயகனாக இருக்கிறார்.
சமூக வலைதளம் வந்தாலே அவர் தனது மகன் தனுஷிற்கு நடத்தி வைத்த திருமணம் பற்றிய பேச்சு தான்.
கடந்த சில தினங்களுக்கு முன் நெப்போலியன் மூத்த மகன் தனுஷிற்கும் அக்ஷ்யா என்பவருக்கும் ஜப்பானில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களான சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பு, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் கலந்துகொண்டனர்.
இர்பான் பரிசு
தற்போது தனுஷ் திருமணத்திற்காக ஜப்பான் சென்றுள்ள இர்பான், புதிய ஜோடி தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அந்த வாட்ச் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக இர்பானிடமும் கூறியிருக்கிறார் தனுஷ்.