நீ சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்கப்போற.. நடிகை அபர்ணதி மேடையில் கொடுத்த பதிலடி
அபர்ணதி
நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேட நடத்தப்படும் ஒரு ஷோவுக்கு போட்டியாளராக வந்தவர் தான் அபர்ணதி. அந்த ஷோ மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனார் அவர்.
இறுதியில் அந்த ஷோவில் இருந்து யாரையுமே ஆர்யா திருமணம் செய்துகொள்ளவில்லை. அபர்ணதி அந்த ஷோ மூலமாக கிடைத்த புகழை வைத்து நடிகையாக தமிழ் சினிமாவில் களமிறங்கினார்.
வசந்தபாலனின் ஜெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அபர்ணதி சமீபத்தில் ரிலீஸ் ஆன இறுகப்பற்று படத்திலும் நடித்து இருக்கிறார்.

என்னத்த கிழிக்கப் போற..
அந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய அபர்ணாதி தான் இதற்கு முன் சந்தித்த அவமானத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
என் அப்பாவின் நண்பரின் மகன் என்னை பார்த்து 'சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்க போற' என கேட்டார். இன்று துபாயில் அவர், நான் நடித்த படத்தின் டிக்கெட்டை கிழித்து படம் பார்க்க போகிறார் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என அபர்ணதி தெரிவித்து இருக்கிறார்.

November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan