கூலி படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் ஹீரோ? 30 வருடம் கழித்து இணையும் கூட்டணி
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் கூலி. இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழி நடிகர்கள் பலரும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கிறார் லோகேஷ் கனகராஜ். கன்னட நடிகர் உபேந்திரா இந்த படத்தில் இணைந்ததாக சமீபத்தில் தகவல் வந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
அமீர் கான்
இந்நிலையில் ஹிந்தி நடிகர் அமீர் கான் கூலி படத்தில் ரஜினி உடன் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
1995ல் Aatank Hi Aatank என்ற படத்தில் அமீர் கான் மற்றும் ரஜினி ஒன்றாக நடித்து இருந்தனர். கூலி படத்தில் ஆமீர் கான் நடிக்க ஒப்புக்கொண்டால் அவர்கள் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிப்பது உறுதியாகும்.