அமீர் கான் - லோகேஷ் பிரம்மாண்ட படம் டிராப்? கூலி தான் காரணம்
சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த கூலி படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களிடம் கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது.
விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேமியோ வந்தது போல, இந்த படத்தில் அமீர் கான் கேமியோ இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமீர் கான் ரோலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
படம் டிராப்
இந்த படத்திற்கு பிறகு அமீர் கான் நடிக்கும் ஒரு பிரம்மாண்ட சூப்பர்ஹீரோ படத்தை லோகேஷ் இயக்க இருந்தார். ஆனால் கூலி படத்தில் அமீர் கானுக்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தால் இந்த படம் டிராப் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் அடுத்து ரஜினி - கமல் இணையும் படம், அதை தொடர்ந்து கைதி 2 ஆகிய படங்களை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படி ஒரு தகவல் பரவி வருகிறது.