நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா, சீரியலில் நடித்துள்ளாரா?- யார் அவர், எந்த தொடர் தெரியுமா?
நடிகர் ஜெய்சங்கர்
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர்.
ஆக்ஷன், த்ரில்லர் சினிமாக்கள் அதிகம் வெளிவருவதற்கு தொடக்க புள்ளியாக இருந்ததில் ஜெய்சங்கருக்கு பெரிய பங்கு உள்ளது.
அற்புதமான சண்டை காட்சிகள், சஸ்பென்ஸ் த்ரில்லருடன் கூடிய படமாக இவரது நடிப்பில் நிறைய படங்கள் இடம்பெற்றிருக்கும்.
சினிமாவை தாண்டி நிறைய சமூக நலத்திட்ட உதவிகளை செய்துவந்த ஜெய்சங்கர் கடந்த 2000ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
குடும்பம்
இவருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜய் என்பவர் அப்பாவை போல மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.
சஞ்சய் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார், இப்போது அவர் சீரியலில் வருவது இல்லை. இதோ நடிகர் ஜெய்சங்கர் மகன்களின் புகைப்படங்கள்,