நடிகர் முரளியின் காதல் கதைக்கும் குஷி படத்திற்கு இப்படியொரு கனெக்ஷன் உள்ளதா?
நடிகர் முரளி
தமிழ் சினிமாவில் பொற்காலம் என்றால் 80 மற்றும் 90களை கூறலாம்.
அந்த காலத்தில் சிறந்த நடிகர்கள், இயக்குனர்கள், படங்கள் என யாராலும் மறக்க முடியாத படங்கள் அமைந்தது.
அதேபோல் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர்களில் ஒருவர் முரளி. இவரது பெயர் சொன்னாலே முதலில் நியாபகம் வருவது இதயம் படம் தான்.
கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார். பிரேமா பார்வை என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர் தமிழில் மணிரத்தினத்தின் பூ விலங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு முரளிக்கு தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த படங்கள் அமைந்தது.
காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றி கொடி கட்டு, இதயம், ஆனந்தம், சமுத்திரம், கனவே கலையாதே, சுந்தரா டிராவல்ஸ் என அவர் நடிப்பில் வந்த சிறந்த படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
காதல் கதை
நடிகர் முரளியையும் அவரது மனைவி ஷோபாவையும் ரியல் லைப் குஷி ஜோடி என்பார்களாம். முரளி தனது நண்பன் கந்தாவின் காதலுக்கு உதவியபோது தான் முதன்முதலாக தனது மனைவி ஷோபாவை சந்தித்தாராம்.
காதல் ஜோடி இருவரும் சந்திக்கும் நேரத்தில் இவர்கள் காத்திருக்கும் போது பேச ஆரம்பித்து நட்பாக மாறி அப்படியே காதலாக மாறியுள்ளது.
குஷி படத்திலும் அப்படி ஒரு காட்சி இருப்பதால் முரளியின் காதல் கதை குஷி படத்துடன் இணைத்து கூறப்படுகிறது.

நீதிபதியிடம் குணசேகரன் கொடுமைகளை புட்டுபுட்டு வைக்கும் பெண்கள், கடைசியில் பேரதிர்ச்சி... எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ

இந்த நாட்டில் இந்து கோவில்களைக் கட்டுவதற்கு தடை.. பாகிஸ்தான், சீனா இல்ல - எது தெரியுமா? IBC Tamilnadu

பிரித்தானிய குடியுரிமை வைத்திருக்கும் மனைவி..பாஸ்போர்ட்டிற்கு காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர் News Lankasri
