சூர்யா 40 படத்தில் நடிகர் சூர்யா இத்தனை கெட்டப்பில் நடிக்கின்றாரா? வெளியான மாஸ்ஸான தகவல் இதோ..
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், இவர் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் OTT வெளியாகி பெரிய வெற்றி பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து சூர்யா கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அப்படத்தை எல்லாம் முடித்த பின்பே நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம் இப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு கதாபாத்திரத்தில் 5 கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் வாரணம் ஆயிரம் படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் 5 கெட்டப்பில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.