திடீரென புதிய படத்திற்கு இவ்வளவு சம்பளத்தை உயர்த்திவிட்டாரா நடிகை ராஷி கண்ணா?
சினிமாவில் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் போதும் உடனே சம்பளத்தை கலைஞர்கள் உயர்த்திவிடுவார்கள்.
இப்போது கோடியில் சம்பளம் வாங்கும் அனைவருமே ஆரம்பத்தில் குறைவாக தான் பெற்றார்கள்.
அப்படி இப்போது ஒரு நடிகை தனது சம்பளத்தை திடீரென ஏற்றியுள்ளார். இமைக்கா நொடிகள் என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா.
அதன்பிறகு அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன் என தொடர்ந்து படங்கள் நடித்தார். தமிழில் அதிக படங்கள் கையில் வைத்திருக்கும் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் செம பிஸி.
இப்படி மொழிகளிலும் நிறைய படங்களில் கமிட்டாகி வருவதால் திடீரென சம்பளம் கிடுகிடுவென உயர்த்தியுள்ளாராம். ரூ 1 கோடிக்கு மேல் சம்பளம் புதிய படத்திற்காக அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.