ரகசியமாக நடிகை டாப்ஸியின் திருமணம் முடிந்துவிட்டதா?- ரசிகர்கள் ஷாக், வெளிவந்த தகவல்
டாப்ஸி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படங்களில் ஒன்று ஆடுகளம்.
தேசிய விருதை அள்ளிய இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் டாப்ஸி. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த டாப்ஸி அடுத்தடுத்து ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பின் டாப்ஸிக்கு பெரிய வாய்ப்பு கிடைக்காததால் அப்படியே தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் சென்றார்.
ஹிந்தியில் அவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியடைய ரன்னிங் ஷாதி, ஜுட்வா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகையின் திருமணம்
டாப்சி முன்னால் பேட்மிண்டன் ப்ளேயர் மத்யாஸ் போ என்பவரை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது.
அடுத்த கல்யாணம் எப்போது, ரசிகரின் கேள்விக்கு யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை கூறிய வனிதா- என்ன சொன்னார்?
2013ம் ஆண்டிலிருந்து இரண்டு பேரும் காதலித்து வருகிறார்கள் என்றும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என செய்திகள் வந்தன.
இந்த நிலையில் டாப்சியும், மத்யாஸ் போவும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள் என்கின்றனர்.

தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri