பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நாயகியும் வெளியேறுகிறாரா?- ஷாக்கான ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டு குடும்பத்தின் அருமையை பற்றி எடுத்துறைக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இடையில் கொஞ்சம் கதை டல் அடித்தாலும் இப்போது வீட்டைவிட்டு வெளியேறிய காட்சிகளுக்கு பிறகு சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது.
மீனா அப்பாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கொஞ்சம் மன வேதனையில் உள்ளனர்.
மாற்றப்படும் நடிகை
சீரியல் ஆரம்பித்ததில் இருந்து அவ்வளவாக கதாபாத்திர மாற்றங்கள் நடைபெறவில்லை, ஆனால் முல்லை கதாபாத்திரம் மட்டும் சித்ரா இறந்ததால் மாற்றப்பட்டது.
அவருக்கு பிறகு நடிகை காவ்யா முல்லையாக நடித்துவர அவரும் சொந்த காரணங்களால் வெளியேறிவிட்டார். இப்போது புதிய நடிகை காவ்யாவாக நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில் தான் இன்னொரு நாயகியின் கதாபாத்திர மாற்றம் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது சீரியலில் ஐஸ்வர்யாவாக நடிக்கும் காயத்ரி படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் இதனால் தொடரில் நடிக்க நேரம் இல்லை என்பதால் விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.