அஜித் அழைத்தும் விஷ்ணுவர்தனால் வரமுடியாத நிலை..இப்படி மாட்டிகிட்டாரே
அஜித்-விஷ்ணு வர்தன்
அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த துணிவு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்கள் அனைவராலும் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துணிவு வெற்றியை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார்.
ஆனால் என்னவோ இவர்களது கூட்டணி அமையவில்லை, ஆனால் தயாரிப்பு லைகா என்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.

அடுத்த பட இயக்குனர்
அஜித் தனது புதிய படத்திற்கு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வைரலாகி வரும் நிலையில் இன்னொரு இயக்குனரின் பெயர் அடிபட்டுள்ளது.
அவர் வேறுயாரும் இல்லை விஷ்ணுவர்தன் தான், அவருடன் அஜித் கூட்டணி அமைப்பார் என கூறப்பட அவரோ வேறொரு படத்தில் கமிட்டாகிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
விஷ்ணுவர்தன் சல்மான் கான் சொந்தம் ஒருவரை வைத்து படம் எடுக்க கமிட் ஆகியுள்ளார். அதனால் அஜித் படத்தை இயக்க முடியாத நிலை விஷ்ணுவர்தனுக்கு ஏற்பட்டுள்ளது.