திடீரென சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்- வலிமை படத்திற்கு மொத்த சம்பளம் இவ்வளவா?
ரசிகர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருந்து வருகிறார் அஜித். குடும்பத்தை முதலில் கவனியுங்கள் நேரம் கிடைத்தால் என் படத்தை பாருங்கள் என கூறியவர்.
தனது வலிமை பட ஃபஸ்ட் லுக் ரிலீஸை கொரோனாவால் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் நாம் கொண்டாடுவது சரியாக இருக்காது என தள்ளி வைத்தார்.
அவர் மற்றவர்களை நினைத்து செய்யும் பல விஷயங்கள் பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது அவர் நடித்துவரும் வலிமை படம் இந்த வருடத்தில் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்கின்றனர், ஆனால் உறுதியான செய்தி வரவில்லை.
இந்த நேரத்தில் தான் அஜித் வலிமை படத்திற்காக முதலில் ரூ. 55 கோடி பேசப்பட்டார் என்றும் தற்போது ரூ. 70 கோடிக்கு திடீரென சம்பளத்தை ஏற்றிவிட்டார் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது.
ஆனால் அஜித்தின் தீவிர ரசிகர்கள் அஜித் இப்படி சம்பளத்தை உயர்த்தி இருக்க மாட்டார் என கூறிவருகின்றனர்.