இயக்குனர் ஷங்கரின் இத்தனை படங்களை நிராகரித்துள்ளாரா அஜித்- வெளியான தகவல்
நடிகர் அஜித்
நடிகர் அஜித் படங்கள் நடிப்பது, சுற்றுலா செல்வது என தன்னை ஏதாவது ஒரு விஷயத்தில் பிஸியாக வைத்துக் கொண்டே இருக்கிறார்.
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் அவர்களது கூட்டணி அமையவில்லை.
தற்போது அவர் தனது 62வது படத்திற்கு மகிழ்திருமேனியுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
வெளிவராத தகவல்
இத்தனை வருட திரைப்பயணத்தில் அஜித் ஒருமுறை கூட ஷங்கரின் இயக்கத்தில் படம் நடிக்கவே இல்லை.
ஆனால் 4 முறை அஜித்தை வைத்து படம் இயக்க ஷங்கர் கதை தயார் செய்ததாகவும், ஒவ்வொரு முறையும் அஜித்தால் அவரது கதையில் நடிக்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி அஜித் இந்தப் படங்களை தவிர்த்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல்