அஜித் துணிவு படத்தை முழுவதும் பார்த்தாரா இல்லையா?- இயக்குனர் வினோத் கூறிய தகவல்
அஜித்தின் துணிவு
கடந்த வருடம் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் மாஸாக வெளியானது போல் இந்த வருடம் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது.
வங்கி பற்றிய விஷயத்தை இப்படம் தெளிவாக கூறி இருக்கிறது, படத்தை பார்த்த ரசிகர்களும் இதுபோன்ற விஷயங்களை மக்களுக்கு ஒரு பெரிய நடிகர் கூறுவது நல்ல விஷயம் தான் என கருத்து தெரிவித்து வந்தனர்.
தற்போது படம் முதல் வாரம் முடிந்து தாறுமாறு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வினோத் சொன்ன தகவல்
துணிவு பட இயக்குனர் எச்.வினோத் படம் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில் அஜித் துணிவு படத்தை முழுவதும் பார்த்தாரா என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், டப்பிங் போது சில காட்சிகள் பார்த்தார், அதன்பிறகு பார்க்கவில்லை. கண்டிப்பாக அவர் துணிவு பார்ப்பார், எனக்கு போன் செய்வார் என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
