இசையமைப்பதை நிறுத்த போகிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்.. வதந்திக்கு மகள் கொடுத்த பதில்
ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் இசையமைத்தாலே பாடல்கள் அனைத்தும் ஹிட் என சொல்லும் அளவுக்கு அவர் பாடல்கள் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மனைவி சாயிரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது பற்றி சில சர்ச்சைகளும் தொடங்கியது. ஆனால் அதை குடும்பத்தினர் மறுத்தனர். பொய் செய்தி பரப்பியவர்கள் எல்லோரையும் எச்சரித்தனர்.
அடுத்த வதந்தி
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிரேக் எடுக்கப்போகிறார் என ஒரு வதந்தி பரவி வருகிறது.
அதை ரஹ்மானின் மகள் கதிஜா மறுத்து இருக்கிறார். 'ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறீர்கள்' என அவர் கோபமாக கேட்டிருக்கிறார்.