முடிவுக்கு வருகிறதா பாரதி கண்ணம்மா? வேறு சேனல் சீரியலுக்கு சென்ற வில்லி நடிகை
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாரதி கண்ணம்மா தற்போது டிஆர்பியில் பெரிய சறுக்கலை சந்தித்து இருக்கிறது. டாப் 3 இடங்களில் இருந்து வந்த அந்த சீரியல் தற்போது மிக குறைந்த ரேட்டிங் காரணமாக டாப் 5 லிஸ்டில் கூட இடம் பிடிப்பதில்லை.
பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரு கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பது போல காட்டப்பட்ட நிலையில் இந்த வாரம் பாரதி கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து வருவது போல ஒரு ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. உன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள ரெடி ஆனால் ஒரு கண்டிஷன் என பாரதி சொல்கிறார். மேலும் ப்ரோமோவில் கவுண்ட்டவுன் போடப்பட்டு இருக்கிறது. அதனால் சீரியல் முடியப்போகிறதா எங்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
மேலும் பாரதி கண்ணம்மாவில் வில்லியாக நடித்து வரும் ஃபரினா தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு சீரியலில் நடிக்க தொடங்கி இருப்பதாகவும் புகைப்படம் வைரல் ஆகி இருக்கிறது. அதனால் அவர் பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகுகிறாரோ எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.